உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி முத்தாலம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை

கடலாடி முத்தாலம்மன் கோயிலில் மாங்கல்ய பூஜை

கடலாடி:  கடலாடி முத்தாலம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் மாங்கல்ய பூஜை, விளக்கு பூஜை, கூட்டு பிரார்த்தனை  நடந்தது.

மூலவர் அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளினார்.  பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், வருண ஜெபம், பஜனை உள்ளிட்டவைகளை பாடினர். பூஜைகளை பூஜகர் கூரியையா செய்தார். அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் ஆர்.வேல்மயில், துணைத்தலைவர் நாகபாண்டி, செயலாளர் எம்.முருகன், பொருளாளர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் காமாட்சி உட்பட
நிர்வாகிகள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !