உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி : காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை 8:30 மணி, இரவு 9:00 மணிக்கு வெள்ளி சிம்மம்,காமதேனு, அன்னம், கைலாசம், வெள்ளி ரதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே., 21ல்) மாலை 5:00 மணிக்கு நடைபெற உள்ளது.

காலை 8:45 மணிக்குள் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருள உள்ளார். திருத்தேர் சங்கராபுரத்தில் உள்ள காட்டம்மன் கோயிலுக்கு சென்ற பின் நாளை (மே., 22ல்) காலை 9:00 மணிக்கு தேர் காரைக்குடிக்கு திரும்புகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் பிரதீபா செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !