சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மழைக்காக சிறப்பு பிரார்த்தனை
ADDED :2437 days ago
சிவகங்கை : சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மழை வேண்டி வர்ண ஜெப பிரார்த்தனை நடந்தது.
இந்து அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி கோயில்களில் வர்ண ஜெப வேள்விகள் நடத்த அரசு உத்தரவிட்டது.நேற்று (மே., 20ல்) மாலை இக்கோயிலில் வர்ணஜெப பிரார்த்தனை நடந்தது. கோயில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமை வகித்தார். கோயில் அர்ச்சகர் சீனிவாசன் அய்யங்கார் முன்னிலை வகித்தார். விவேகானந்தா பள்ளி செயலர் சாரதா சங்கரன், லதா சீனிவாசன், இந்தி ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் மாணவர்கள் பிரார்த்னையில் பங்கேற்றனர். பெருமாளுக்கு பூஜை செய்தனர்.