உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்- 15

ரமலான் சிந்தனைகள்- 15

வேண்டாமே வாக்குவாதம்

சிலர் நல்லதைச் சொன்னால் ஏற்பதே இல்லை. உண்மையை எடுத்துச் சொன்னால் கோபப் படுவார்கள். தங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருப்பார்கள். இத்தகைய வர்களுடன் தர்க்கம் புரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் நபிகள் நாயகம். "தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் (சொர்க்கம்) மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன்,” என்கிறார் அவர்.

உண்மையை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல், தர்க்கம் செய்பவர்களுடன் வாக்குவாதம் செய்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்களை புறக்கணித்து விடுவதே நல்லது.

* இன்று (மே., 21ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:39 மணி
* நாளை (மே., 22ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !