உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் ஞானபுரீ மங்கள மாருதி கோவிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்

திருவாரூர் ஞானபுரீ மங்கள மாருதி கோவிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்

திருவாரூர்:ஞானபுரீ மங்கள மாருதி கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, ஆறு மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என, கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில், குரு ஸ்தலம் அருகே, ஞானபுரீ என்ற இடத்தில், ஸ்ரீசங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி, ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் நடந்து வருகிறது.பதரி சங்கராச்சாரியார், கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், நேற்று (மே., 20ல்) கோவிலுக்கு வந்து, திருப்பணிகளை பார்வையிட்டார். அவர் கூறுகையில், இன்னும், ஆறு மாதங்களில், இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

திருப்பணியில் எந்த தேக்கமும் இல்லை, என்றார்.ரமணி அண்ணா கூறும்போது, சகடபுரம் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பட்டு, அதிவிரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !