சர்வதீர்த்த குளத்தில் உழவார பணி
ADDED :2435 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அப்பர் இறைபணி அறக்கட்டளையினர், சர்வதீர்த்த குளத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில், அப்பர் இறைபணி அறக்கட்டளை, 1998ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இதில், 90க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.ஒவ்வொரு மாதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில் மற்றும் தெப்பக்குளங்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 264வது உழவாரப்பணியாக, காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தை சுத்தம் செய்தனர். குளத்தில் மண்டி கிடந்த குப்பை கழிவுகளை அகற்றினர்.