செங்கம் வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :2332 days ago
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள, வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் சமேத ருக்மணி கோவில், கருட சேவை விழா கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும், அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் மற்றும் ருக்மணி அம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. விழாவில், நேற்று (மே., 20ல்), தேர்த்திருவிழா நடந்தது.
இதையொட்டி, 21 அடி உயரதேரில் வேணுகோபால் பார்த்த சாரதி பெருமாள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வந்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவின் நிறைவாக, 23ல், தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.