கிணத்தடி காளியம்மன் பூச்சொரிதல் விழா
ADDED :2378 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி கிணத்தடி காளியம்மன் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது.
கண்டவராயன்பட்டி கோயில் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மதுக்குடம், பூத்தட்டு, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் முன்பாக பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். கிராமத்தினர் சார்பில் பட்டு, மலர் அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.