விருத்தாசலம் ராஜகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED :2527 days ago
விருத்தாசலம்:விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், இன்று (மே., 23ல்) சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு அலங்கரித்த வாகனத்தில் வீதியுலா நடந்தது.நேற்று (மே., 22ல்) பகல் 11:00 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு மேல் யானை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, இன்று (மே., 23ல்) மாலை 6:00 மணியளவில் பெருமாள், தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.