சோழவந்தான் அருகே காடுபட்டியில் கத்தி போடும் திருவிழா
ADDED :2583 days ago
காடுபட்டி : சோழவந்தான் அருகே காடுபட்டி காளியம்மன், மாரியம்மன், ராமலிங்க சவுடாம் பிகையம்மன் கோயில் வைகாசி பொங்கல் கத்திபோடும் விழா நடந்தது. மே 17ல் கொடியேற்றத் துடன் துவங்கிய விழாவில் காப்பு கட்டிய பக்தர்கள், அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று (மே., 22ல்) மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று(மே 23) அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கின்றனர். ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின்முறை விழா குழுவினர் செய்திருந்தனர்.