உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி மொரட்டாண்டி கோவிலில் சிறப்பு ஹோமம்

புதுச்சேரி மொரட்டாண்டி கோவிலில் சிறப்பு ஹோமம்

புதுச்சேரி:மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் உள்ள 9 அடி உயர சொர்ண சிதம்பர கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.

புதுச்சேரி மொரட்டாண்டியில் விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள 9 அடி உயர சொர்ண சிதம்பர கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (மே., 22ல்) சிறப்பு ஹோமம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, கணபதிக்கு 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதா ராம குருக்கள், செய்தனர். சீதாராம அய்யர் குடும்பத்தினர் உபயதாரராக இருந்து நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !