திருவள்ளூர் சங்கடஹர சதுர்த்தி பூஜை விமரிசை
ADDED :2332 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில்,என்.ஜி.ஓ., காலனி சந்தான விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று (மே., 22ல்), சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதே போல், திருவள்ளூர் ரயிலடி வழி துணை விநாயகர் கோவில், ஆயில் மில் வெற்றி விநாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் வரசித்தி விநாயகர் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் செல்வ
விநாயகர் சன்னதி, பெரியகுப்பம் காரிய சித்தி விநாயகர் கோவில், மகா வல்லப கணபதி கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி நேற்று (மே., 22ல்) நடந்தது.
சோழவரம் அடுத்துள்ள ,பஞ்சேஷ்டி நத்தம் (இ-கணபாக்கம்) கிராமத்தில், வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. பின், 1,008 மூல மந்திர ஹோமம் ககார சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்தபன கலசாபிஷேகம் நடந்தது.