பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் வருண ஜபம்
ADDED :2333 days ago
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில், சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், கோடை வெப்பத்தைத்
தணிக்கவும், மழை வேண்டியும், வருண ஜபம் நடத்தப்பட்டது.நேற்று (மே., 22ல்) காலை, 7:30 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவக்கப்பட்டு, 11 வேத விற்பன்னர்கள் முன்னிலையில், 1008 வருண ஜபம், ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன.அதைத் தொடர்ந்து,
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.