உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை பொம்ம காளியம்மனுக்கு பூச்சாட்டுத்திருவிழா

காரமடை பொம்ம காளியம்மனுக்கு பூச்சாட்டுத்திருவிழா

காரமடை : காரமடை அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் பழமை வாய்ந்த பொம்ம காளியம்மன் திருக்கோவில் பூச்சாட்டுத்திருவிழா கடந்த, 14ம் தேதி துவங்கியது.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் அன்றாடம் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடந்தது. இரவு நேரத்தில் பழமையும் பாரம்பரியமும், மாறாமல் நடத்தப்படும்
பறை அடித்தல் நிகழ்ச்சியும், இளைஞர்கள் ஆட்டம் பாட்டமும் நடந்தது.விழா துவக்க நாளில் பூச்சாட்டு நிகழ்ச்சியும், 21ம் தேதி சக்தி கரகம் எடுத்தலும், நேற்று (மே., 22ல்) மா விளக்கு எடுத்தல், அக்னி சட்டி ஏந்தி வருதல் என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அதிகாலை முதல் அம்மன் அழைப்பு, ஐம்பொன் உருவம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் என தொடர்ந்து நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பொம்ம
காளியம்மன் அருளை பெற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இன்று (மே., 23ல்) மஞ்சள் நீராட்டுடன் திரு விழா பூர்த்தியாகிறது. விழா ஏற்பாடுகளை கிட்டாம்பாளையம் ஊர்
மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !