உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பூச்சாட்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கணபதி ஹோமம், கம்பம் நடுதல், பூச்சட்டி எடுத்து கம்பம் சுற்றி ஆடுதல், அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சீர் தட்டு எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சக்தி கரகம், கவுண்டம்பாளையம் ஸ்ரீ ராஜமகா கணபதி கோவிலில் இருந்து ராமுகுட்டி லே-அவுட், உடையார் காலனி, தாமரை நகர் வழியாக கோவிலை அடைந்தது. இதில், பெண்கள், 20 அடி அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதல், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !