குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்
ADDED :2633 days ago
மேட்டுப்பாளையம்: துதிக்கை ஆழ்வாராக பக்தர்களால் போற்றப்படும் விநாயகர், வை காசிமாத திருவோண நட்சத்திரமான நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கோவிலில் சக்தி விநாயகராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், முழு முதற்கடவுளான விநாயகர் இந்து சமயமான சைவத்தில் கணபதியாகவும், வைணவத்தில் துதிக்கையாழ்வாராகவும் போற்றப்படுகிறார். திருவோணநட்சத்திரமான நேற்று, சக்தி விநாயகருக்கு சகலவித திரவிய அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு, சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றிலும் மலர் மாலைகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.