உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பு

கோவில் நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பு

வெள்ளகோவில்:வெள்ளகோவில் வட்டாரத்தில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து, கோவில் நிலங்களை மீட்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெள்ளகோவில் சோளீஸ்வரசுவாமி கோவில், கண்ணபுரம் மாரியம்மன் விக்ரம சோளீஸ் வரசுவாமி, மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோவில், முத்தூர், சோளீஸ்வரசுவாமி கோவில், மாதராயப் பெருமாள்கோவில், உத்தமபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், லக்கம நாயக்கன்பட்டி அழகீஸ்வரசுவாமி, தூரம்பாடி, குலமாணிக்க ஈஸ்வரர் கோவில் உட்பட எட்டு கோவில்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 800 ஏக்கர் புன்செய் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த நிலத்தை தனியார்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் அனைவருக்கும் இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் காரணத்தால் மந்த நிலை நீடித்தது. உடனடியாக தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி
வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து புன்செய் நிலம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், எட்டு கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நில ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை தாமாக முன் வந்து கோவில்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நிலங்கள் கையகப்படுத்துவதில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !