திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்ஸவ விழா
ADDED :2330 days ago
காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா, நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.காரைக்கால், திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரபகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி ஆச்சார்யவர்ணம் விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன், பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பின் மூலவர் விநாயகருக்கு புனிதநீர்கொண்டு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.