உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா

கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா

நாமக்கல்: ராசிபுரம், கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராசிபுரம், கைலாசநாதர் கோவில் அருகே, பிரசித்தி பெற்ற கோட்டை முனியப்பன் கோவிலில் பொங்கல் திருவிழா வைகாசி மாதம் நடைபெறும். நடப்பாண்டு திருவிழா, நேற்று முன்தினம் கணபதி ?ஹாமம், நவக்கிரஹ ?ஹாமத்துடன் துவங்கியது. சுவாமிக்கு அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கைலாசநாதர் நந்தவனத்தில் பூஜை கூடை, சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !