உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், வரும், 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 4ம் தேதி, கருடசேவையும், 6ல், தேர் திருவிழாவும் இடம் பெறுகின்றன.

ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில் உள்ளது, சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலின் வைகாசி பிரம்மோற்சவம், வரும், 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று, மாலை, 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், அதை தொடர்ந்து உற்சவர் பெருமாள், சேஷ வாகனத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார். மறுநாள், சிம்ம வாகனத்திலும், திங்கட்கிழமை காலை, சூரிய பிரபை, மாலையில், சந்திர பிரபை என, உலா எழுந்தருளுகிறார்.

பிரம்மோற்சவத்தின் சிறப்புமிக்க கருடசேவை, 4ம் தேதி நடக்கிறது. 5ம் தேதி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், 6ம் தேதி, காலை புதிதாக உருவாக்கப்பட்ட தேரில், முதல் முறையாக உலா வருகிறார். 7ம் தேதி காலை, சக்ர ஸ்தானம், இரவு, குதிரை வாகன புறப்பாடுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !