திருவாலங்காடு திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED :2325 days ago
திருவாலங்காடு: இரண்டு ஊராட்சிகளில், நேற்று (மே., 26ல்) நடந்த தீ மிதி விழாவில், நூற்றுக் கணக்கான பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருவாலங்காடு ஒன்றியம், இலுப்பூர் கிராமத்தில், தீ மிதி திருவிழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று (மே., 26ல்) காலையில், துரியோதனன் படுகளம், பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, 600க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அதை தொடர்ந்து, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது.அதேபோல், ராமஞ்சேரி ஊராட்சியில், திரவுபதியம்மன் கோவிலில் நடந்தது. தீ மிதி விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.