கிருஷ்ணராயபுரம் சீதா ராமர் திருக்கல்யாணம்
ADDED :2324 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தில், சீதா ராம கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தில், கடந்த, 31 ஆண்டுகளாக, சீதா ராம கல்யாண உற்சவம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 23ல், கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து மறுநாள் இரவு, 7:00 மணிக்கு மாஸ்டர் ஜானகிராமன் குழுவினரின் பக்திப் பாடல் கச்சேரி நடந்தது. நேற்று (மே., 26ல்) காலை, சீதா ராம திருக்கல்யாணம் விமரிசையாக
நடந்தது. பின், ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின், பக்தி பாடல் கச்சேரி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருச்சி தேசியக் கல்லூரி முதல்வர் சுந்தர்ராமன் மற்றும் சுப்பிரமணியன், மதுரநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.