ஆர்.எஸ்.மங்கலம் முனீஸ்வரர் கோவில் பூக்குழி விழா
ADDED :2620 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான்கோட்டை கொட்டார முனீஸ்வரர் கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக
விரதமிருந்த பக்தர்கள் கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.