உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவரை தரிசித்த பக்தர்கள்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவரை தரிசித்த பக்தர்கள்

பல்லடம்: பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.ஒவ்வொரு மாதமும், பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள், கால பைரவருக்கு உகந்தது என்பதால், அந்நாளில் பக்தர்கள், நேர்த்தி கடன் செலுத்தி, பைரவரை வழிபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், பல்லடம் - கணதிபாளையத்திலுள்ள ஸ்ரீவடுகநாத சுவாமி கோவிலில், கால பைரவர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.பக்தர்கள், வெண் பூசணி, மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றால் விளக்கு ஏற்றி வைத்து, பைரவரை வழிபட்டனர். விநாயகர், மற்றும் பைரவருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், கால பைவரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !