சிவாலயபுரம் சங்கரலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் விழா
ADDED :2430 days ago
மதுரை: தும்பைப்பட்டி சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோவிலில், திருவாசகம் திருவேள்வி முற்றோதுதல் விழா இன்று(28ம் தேதி) காலை 9.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது. முன்னதாக தும்பைப்பட்டி, சாமி வீட்டில் இருந்து உற்சவர் சங்கர லிங்கம் சுவாமி சர்வ அலங்காரத்தில் சிவாலயபுரம் கோவிலுக்கு, பஞ்சவாத்தியம் வாசித்து, மதுரை பரதநாட்டிய மாணவிகள் நடனத்தடன், 500க்கும் மேற்பட்ட சிவனடியார்களுடன் சுவாமி ஊர்வலமாக வந்தார். கோவிலில் சிவனடியார்கள் மற்றும் பல பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.