உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா சுவாமி கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

சித்தானந்தா சுவாமி கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமிகள் 182 வது குருபூஜை விழாவையொட்டி சுவாமிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது

கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 182ம் ஆண்டு குரு பூஜை விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. கருவடிக்குப்பம், இ.சி.ஆரில் உள்ள சித்தானந்தா சுவாமி கோவிலில், குரு சித்தானந்தா சுவாமிகளின் 182ம் ஆண்டு குரு பூஜை பெருவிழா இன்று (29ம் தேதி) நடைபெற்றது,

இதனையொட்டி, நேற்று மாலை 6.00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம் செய்யப் பட்டு, இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.இன்று குருபூஜை நடக்கிறது. அதனையொட்டி, காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு குரு சித்தானந்தா சுவாமிக்கு மகா அபிஷேகமும், 9:30 மணிக்கு கலச புறப்பாடு, 10:00 மணிக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது. குருபூஜை விழாவையொட்டி, 7,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி, இசை, நாட்டியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று (29ம் தேதி) காலை 10:45 மணிக்கு கீதா முத்தையன் குழுவினரின் திரு ஒவாசகம் முற்றோதல் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு புதுச்சேரி நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சூசைராஜ் குழுவினரின் நாட்டி யாஞ்சலி, இரவு 7:30 மணிக்கு நவாப் ராஜமாணிக்கத்தின் பிரதம சிஷ்யர் ராமலிங்க சிவா குழுவினரின் குரு சித்தானந்தா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில அற்புதங்கள் என்ற நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவசேனாதிபதி குருக்கள், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !