உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா

கரூர் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா

கரூர்: நொய்யல் அருகே, முனியப்ப சுவாமி கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. கரூர் அடுத்த, நொய்யல் அருகே, முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரையில், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, முனியப்ப சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, படையலிட்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !