உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி: வீரபாண்டி கரபுரநாதருக்கு பரிகார பூஜை

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி: வீரபாண்டி கரபுரநாதருக்கு பரிகார பூஜை

வீரபாண்டி: அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி, கரபுரநாதருக்கு, சிறப்பு பரிகார பூஜை நடந்தது. அக்னி நட்சத்திரத்தையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர்
கோவிலில், கடந்த, 4ல், மூலவர் கரபுரநாதருக்கு, தாரா பாத்திரம் வைத்து, தினமும் இடைவிடாது பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 11 கலசங்களில், பவானி ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரால், வருண யாகம், வருண ஜபம் நடந்தது.

அதேபோல், கொடி மரத்துக்கு அருகிலுள்ள, அதிகார நந்திக்கு தொட்டி கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி, நந்தீஸ்வரரை குளிர்வித்தனர். அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியான நேற்று,
(மே., 29ல்)கரபுரநாதர் கோவிலில், கரடி சித்தர் சன்னதி முன் பரிகார யாக பூஜை நடந்தது. அதில், 11 கலசங்களில் புனிதநீர் வைத்து, யாகம் செய்து, மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி, நந்தீஸ்வரருக்கு அபி ?ஷகம் செய்யப்பட்டது. மதியம் நடந்த சிறப்பு பரிகார பூஜையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்றுடன் (மே., 29ல்), கத்திரி வெயில் காலம் முடிந்தாலும், வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால், மூலவர் மீது, தாரா பாத்திரத்தில், பன்னீர் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !