உளுந்தூர்பேட்டை கோவில் இடத்தை மீட்கக்கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
ADDED :2342 days ago
உளுந்தூர்பேட்டை: புதுப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பெருமாள் கோவில் இடத்தை மீட்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விபரம்:உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி
வருகின்றனர். மேலும் அங்குள்ள சுகாதார வளாக பகுதி உள்ளிட்ட சில இடங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கோவில் இடத்தை மீட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.