உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணமங்கலம் மழை வேண்டி ஏரியில் மக்கள் சிறப்பு பூஜை

கண்ணமங்கலம் மழை வேண்டி ஏரியில் மக்கள் சிறப்பு பூஜை

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராம ஏரியில், மழை வேண்டி கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், கொங்கராம் பட்டு ஏரியில் உள்ள மதகுக்கு அலங்காரம் செய்த, பின்னர் ஏரியில் சிறிய பள்ளம் தோண்டி தவளைகளை விட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு ராகி களி, கருவாட்டு குழம்பு, படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். மேலும், கணவனை இழந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது, நூதன வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !