உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டத்தில்,ராஜராஜசோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில்,ராஜராஜசோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வில் ஈடுபட்டனர். மைய தலைவர்
பிரகாஷ் தலைமையில், முனைவர் சுதாகர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய இந்த ஆய்வில், ராஜராஜ சோழன் காலத்து, மூன்று கல்வெட்டை கண்டறிந்தனர். இதில், 15ம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரு கல்வெட்டில், இப்பகுதியில் உள்ள சிவனின் பெயர் பிரமீசுர உடையார் என்றும், அம்மையின் பெயர் காமகோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணாரமுதபட்டன் என்பவர், இக்கோவில் தர்ம காரியங்களை கவனித்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொரு கல்வெட்டில், கோவிலுக்கு ஒருவர் அளித்த, 16 பணம் பெற்று கொண்டதை
தெரிவிக்கிறது. எறும்பூர் கிராமம், 1,000ம் ஆண்டுக்கு மேலாக, அதே பெயருடன் அமைந்திருப்பதும், ராஜராஜன் காலம் முதல், நாயக்கர் காலம் வரை, கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !