சோழவந்தான் அருகே கருப்பட்டி மாயாண்டி, வைகாசி உற்ஸவம்
ADDED :2352 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி, முனியாண்டி, பகவதி அம்மன், காளியம்மன் பட்டத்தரசியம்மன், சோணைசுவாமி கோயில் வைகாசி உற்ஸவம் மூன்று நாட்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று (மே., 30ல்) காலை ஊர்வலமாக சென்று சக்தி கரகம் முளைப்பாரியை வைகை ஆற்றில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.