உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் பூப்பல்லக்கு

சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் பூப்பல்லக்கு

காடுபட்டி: சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமா காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.இக்கோயிலில் மே 21 கொடியேற்றத் துடன் திருவிழா துவங்கியது. பக்தர்கள் காப்புகட்டி பால்குடம், அக்னிசட்டி எடுத்தனர். நேற்று முன்தினம் (மே.,29ல்) மாவிளக்கு வைத்தனர். முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !