சாணார்பட்டி, கொசவபட்டியில் உத்திரியமாதா ஆலய விழா
ADDED :2469 days ago
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயத்தில் நாற்பதாம் நாள் திருவிழா நடந்தது.
கடந்த மே 26 அன்று இரவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதை தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும், மறுநாள் இரவு மின்தேர் பவனியும் நடந்தது. மே 29 அன்று இரவு மின் அலங்கார ரதத்தில் ஏசுநாதர் தேவலோகத்திற்கு எழுந்தருளிய காட்சி நடந்தது.
தொடர்ந்து வாண வேடிக்கை முழங்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் கும்மியாட்டத்துடன் நகர்வலம் நடந்தது.
நேற்று (மே., 30ல்) காலை அன்னதானத்தை தொடர்ந்து ரத ஊர்வலம் நடந்தது. இரவு தேவசகாயம்பிள்ளை எனும் சரித்திர நாடகம் நடந்தது.
மணியம் டேவிட் இருதயசாமி, நாட்டாமை குழந்தைராஜ், மேனேஜர் அற்புதம், பொருளாளர் அமலதாஸ் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.