திருமலை சேவா டிக்கெட்: 7ல் முன்பதிவு
ADDED :2361 days ago
ஈரோடு: திருப்பதி, திருமலையில் தினமும் சுப்ரபாதம், தோமாலை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவா தினமும் நடக்கிறது. வாரந்தோறும் விசேஷ பூஜை, திருப்பாவாடை சேவை, சகஸ்ர கலசாபிஷேகம், அஷ்டதல பாத பத்ம ஆராதனை, நிஜபத்ம தரிசன சேவா நடக்கிறது. செப்டம்பர் மாதம் நடக்கும், சேவாக்களுக்கான டிக்கெட், ஈரோடு, ஸ்ரீவாரி டிரஸ்ட்டில், வரும், 7ல் முன்பதிவு செய்யப்படுவதாக, ஸ்ரீவாரி டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.