உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் உழவாரப்பணி

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் உழவாரப்பணி

கொளத்தூர்:சோமநாத சுவாமி கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு, நேற்று (ஜூன்., 2ல்) உழவாரப்பணி நடைபெற்றது.

கொளத்தூரில், 800 ஆண்டுகள் பழமையான, அமுதாம்பிகை உடனுறை சோமநாத சுவாமி கோவில் உள்ளது.ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தாயுமானவர் இறைபணி சங்கம் சார்பில், நேற்று (ஜூன்., 2ல்) உழவாரப் பணி நடந்தது.வங்கி ஊழியர் உட்பட, 70-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோவிலின் கற்பகிரகம், தீபம் ஏற்றும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை, தூய்மைப்படுத்தினர்.இது குறித்து, அச்சங்கத்தினர் கூறியதாவது:சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, சிறிய மற்றும் பெரிய கோவில்களை தேடிப் பிடித்து, ஒவ்வொரு மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொள்கிறோம்.புதிதாக கோவில் கட்டுவதை விட, இருக்கிற கோவிலை பராமரித்தாலே, இறைவன் அருள் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !