பிரதமர் மோடிபிரதமராக பதவி ஏற்றதையொட்டி மதுரையில் பா.ஜ., வழிபாடு
ADDED :2317 days ago
மதுரை:பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதையொட்டி பேரையூர் தாலுகா டி.கல்லுப் பட்டி பாப்புநாயக்கன்பட்டி விநாயகர் மற்றும் காளியம்மன் கோயில்களில் பா.ஜ., சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.மாவட்ட பொது செயலர் மூவேந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிளை நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், ராமர், ஜெயபாண்டி, பூவலிங்கம், மண்டல் பொறுப்பாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.