உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியலா நடந்தது.

முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனும் கருட சேவை 3ம் தேதி இரவு நடந்தது. 4ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று 5ம் தேதி காலை 7:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும், விசேஷ பூஜை நடந்தது. 8:30 மணிக்கு உற்சவர் தேரில் ஏற்றினர். 9:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழாக்குழுவினர், தேர்திருப்பணிக் குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். விழாவின் போது 50க்கும் மேற்பட்ட தவில், நாதஸ்வர கலைஞர்கள், செண்டை மேள குழுவினர், நாட்டிய குழுவினர் பங்கேற்னர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !