உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கோவில் பூங்காவை சுத்தம் செய்த தனியார் கல்லூரி மாணவர்கள்

மயிலாப்பூர் கோவில் பூங்காவை சுத்தம் செய்த தனியார் கல்லூரி மாணவர்கள்

மயிலாப்பூர் : உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, நேற்று  ஜூன், 5ம் தேதி கோவில் குளம், பூங்காவை சுத்தம் செய்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த, தேசிய மாணவர் படையினரை, மக்கள் பாராட்டினர்.

உலக சுற்றுச்சுழல் தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 5ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தனியார் கல்லூரியைச் சேர்ந்த, தேசிய மாணவர் படையினர்,
நேற்று ஜூன், 5ம் தேதி கபாலீஸ்வரர் கோவில் குளம் மற்றும் நாகேஷ்வரா பூங்கா ஆகிய இரண்டு இடங்களையும், தூய்மைப்படுத்தினர்.மாணவர்களின் இச்செயலை, கோவிலுக்கு வந்த பக்தர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.இதேபோன்று, மற்றப்பகுதிகளில் உள்ள கோவில் குளங்கள் மற்றும் பூங்காக்களை சுத்தம் செய்ய, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !