உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில், பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை

உடுமலையில், பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை

உடுமலை:உடுமலையில், ரம்ஜானையொட்டி, பூர்வீக பள்ளி வாசலில் சிறப்புத்தொழுகை நடந்தது.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டது.

உடுமலை பூர்வீக பள்ளி வாசலில், காலை நடந்த சிறப்பு தொழுகையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.இதே போல், ஜாமியா பள்ளி வாசல் உட்பட அனைத்து பள்ளி வாசல்களிலும்,
சிறப்புத்தொழுகை நடந்தது. பின்னர், முக்கிய வீதிகளின் வழியாக அமைதி ஊர்வலம் நடந்தது. தொழுகை முடிந்ததும், தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதே போல்,
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !