திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மகா சாந்தி யாகம்
ADDED :2351 days ago
சென்னை:உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மகா சாந்தி யாகம் நடந்தது.திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது,
பார்த்தசாரதி பெருமாள் கோவில்.திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பருவ மழை பெய்யவும், மகா சந்தி யாகம், நேற்று
(ஜூன்., 7ல்)நடத்தப்பட்டது.கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் சன்னிதானத்தில் நடந்த இந்த யாகத்தை, பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில், 10 ஆச்சாரியார்கள் யாக வேள்வியை நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.