உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா மாறுதல் மோசடி: பதிவுத்துறைக்கு உத்தரவு

மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா மாறுதல் மோசடி: பதிவுத்துறைக்கு உத்தரவு

மதுரை : பட்டா மாறுதல் செய்யப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் குறித்து எந்த பதிவும் செய்ய கூடாது என பதிவுத்துறை யினருக்கு கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் உத்தரவிட்டார்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த இடங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் பொன்மேனி
வாழைத்தோப்பு பகுதியிலுள்ள 14 ஏக்கர் நிலத்தை யோகேஸ்வரன் என்பவர் தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யக்கோரி ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு செய்தார். அம்மனு தள்ளுபடியானது. இந்நிலையில் செல்வராஜ் மேற்கு தாசில்தாராக இருந்த போது
யோகேஸ்வரன் பழைய ஆவணங்களை மறைத்து பட்டா மாறுதல் செய்ய மனு செய்தார். அதன்பேரில் அவருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதையறிந்த கோயில் நிர்வாகம்
சார்பில் பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று (ஜூன்., 7ல்) முன்னாள் மேற்கு தாசில்தார் செல்வராஜ் தற்போதைய தாசில்தார் கோபி வருவாய் ஆய்வாளர் வி.ஏ.ஒ.க்களிடம் கலெக்டர் (பொறுப்பு) விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட நில ஆவணங்களை அவர் ஆராய்ந்தார். நிலம் குறித்து ஆர்.டி.ஓ. நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வருவாய்த்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இந்நிலம் குறித்து எவ்வித பதிவு பரிமாற்றமும் மேற்கொள்ளாமல் இருக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் (பொறுப்பு) உத்தரவிட்டார். விசாரணை முடிந்ததும் ஓரிரு நாட்களில் கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !