அலங்காநல்லூரில் மழை வேண்டி வழிபாடு
ADDED :2352 days ago
அலங்காநல்லூர்:அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் போதிய மழையின்றி பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மா, கொய்யா, வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது.
இதனால் பாரம்பரிய வழக்கப்படி பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் மழை வேண்டி வலையபட்டி மஞ்சமலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ராஜேந்திரன், வேலு, மனோகரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.