மதுரை இளைய ஆதினம் நியமனம்
ADDED :2352 days ago
மதுரை:திருவாவடுதுறை ஆதினத்தில் மூத்த தம்பிரானாக 45 ஆண்டுகளாக இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான் மதுரை இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருவாவடுதுறை
ஆதினம் அம்பலவாண தேசிகர் முன்னிலையில், மதுரை ஆதினம் நேற்று (ஜூன்., 7ல்) சம்பிரதாய சடங்குகளை செய்து, இளவரசராக நியமித்தார். அவருக்கு ஞானசம்பந்த தேசிகர் என பெயர் சூட்டப்பட்டது.