கடலூர் முத்து மாரியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :2352 days ago
கடலூர்: குறிஞ்சிப்பாடி அடுத்த பெரியகண்ணாடி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு வரும் 12ம் தேதி மதியம் 3:00 மணிக்கு கரிக்கோலம் வருதல், மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், 6:30 மணிக்கு கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், இரவு 7:00 மணிக்கு முதல் கால வேள்வி நடக்கிறது.
13ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. 14ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, 8:00 மணிக்கு நாடி சந்தானம், 8:30 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, 9:15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு
கும்பாபிஷேகம் 10:20 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.