கடலாடி கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2413 days ago
கடலாடி:கடலாடி அருகே தேராங்குளத்தில் செல்வ விநாயகர், கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டுபெரியமாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.தேராங்குளம் முதல் சாயல்குடி சாலை வரை 10 கி.மீ.,க்கு ஆறு பெரிய மாட்டு
வண்டிகள் பங்கேற்றன.மதுரை ஆத்திக்குளம் பாலுத்தேவர் மாடு முதலிடமும், திருநெல்வேலி கடம்பூர் கருணாகர ராஜா மாடுகள் இரண்டாமிடமும்,கமுதி வேப்பங்குளம் நல்லத்தேவர்
மாடுகள் மூன்றாமிடமும் பிடித்தன.