ராஜபாளையம் விவேகானந்த கேந்திரக்கிளை புதுப்பித்தல் கூட்டம்
ADDED :2339 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்த கேந்திர கிளை புதுப்பிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மேனேஜிங் டிரஸ்ட்டி கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
விவேகானந்த கேந்திர திட்ட செயலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமாரி விவேகானந்த கேந்திர தலைமை அலுவலர் முன்னிலையில், கேந்திரக்கிளை தலைவர்,செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழுஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.
என்.ஏ. ஆர் குருகுல தாளாளர் மஞ்சுளா, ராஜஸ்ரீ, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா, ஷியாமளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.