உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதிஷ்டை தினம்: சபரிமலை நடை திறப்பு

பிரதிஷ்டை தினம்: சபரிமலை நடை திறப்பு

சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக, சபரிமலை நடை, இன்று மாலை திறக்கப்பட்டது.


நாளை இரவு அடைக்கப்படும். இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறந்து, தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது.


இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின், நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் துவங்கும். காலை, 7:30 மணிக்கு, உதயாஸ்தமன பூஜை நடக்கும். பகல், 12:30 மணிக்கு, பிரதிஷ்டை தின சிறப்பு களபாபிஷேகம் நடைபெற்ற பின், உச்சபூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். பகல், 1:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து புஷ்பாபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு படிபூஜையும் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !