பாலமேடு கோயில்களில் கனி மாற்றும் திருவிழா
ADDED :2331 days ago
அலங்காநல்லூர்: பாலமேடு பாறைக்கருப்பு சுவாமி, முத்தாலம்மன் கோயில்களில் மழை வேண்டி கனி மாற்றும் திருவிழா நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பெண்கள் பழத்தட்டுகளை சுமந்தபடி மேளதாளம் முழங்க ஊர்வலம் சென்றனர். பின் கோயிலுக்கு சென்று சுவாமிகளுக்கு கனி மாற்றும் சிறப்பு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை அம்பேத்கர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்தனர்.