நலம் தரும் நல்லவர் சாபம்
ADDED :2334 days ago
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகன் நளன் ஒருநாள் ஆற்றுக்குச் சென்றான். அங்கு முனிவர்கள் சிலர் நீராடினர். விளையாட்டாக அவர்களின் ஆடைகளை தண்ணீரில் விட்டான் நளன். இதைக் கண்டதும் அவர்கள், ”எதை நீ தண்ணீரில் விட்டாலும் அது மிதக்கும்” என்று சாபமிட்டனர்.
பின்னாளில் இலங்கை செல்வதற்காக கடலைக் கடக்க முயன்ற ராமர், கடலரசனான சமுத்திரராஜன் மூலம் இதனை அறிந்தார். இதையடுத்து நளனின் தலைமையில் வானரவீரர்களை அனுப்பி பாறைகளை கடலில் விட, அவை நீரில் மிதந்தன. இதன் மூலம்
சேது என்னும் பாலம் உருவானது. நல்லவர் இட்ட சாபம் கூட, நலம் தரும் என்பதற்கு இது உதாரணம்.